இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள முதற் கட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் தொகையான 330 மில்லியன் அமெரிக்க டொலரில் 121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிடம் பெற்ற கடன் தொகைக்காக மீள் செலுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியலாம்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம் கிடைக்கும் நிதியினை வேறு தேவைகளுக்கு பாவிக்க முடியாது. நேரடியாக திறைசேரி டொலர் கணக்கு வைப்பிலடப்படும். ஆனால் இம்முறை திறைசேரி உதவி செயலாளரின் கணக்கிற்கு வைப்பிளப்பட்டுள்ளமையினால் அதனை கடன் மீள் செலுத்துகைக்காக பாவிக்க முடியுமென ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் கூறியுள்ளார்.