இந்துக் கல்லூரி – கோல்ட்ஸ் அணிகள் கிரிக்கெட் மோதல்

இந்துக் கல்லூரி, கொழும்பு 04 மற்றும் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் அக்கடமி 11 மற்றும் 13 வயத்துக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டிகள் இன்று(26.03) பம்பலபிட்டிய, இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

காலையில் நடைபெற்ற 11 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி 09 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. சிறப்பான ஆரம்பத்தை இந்துக் கல்லூரி அணி பெற்ற போதும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற தவறியமை மற்றும் அதிக உதிரி ஓட்டங்களை வழங்கியமையினால் தோல்வியினை தழுவியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. இதில் ருவின் 23 ஓட்டங்களையும், அக்ஷு 16 ஓட்டங்களையும் பெற்றனர். இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கிரிஷான், சஜித்வேல், மிதுனேஷ் ஆகியோர் தலா 02 விக்கெட்களையும். பிரவிக், சபீசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்துக் கல்லூரி அணி 7.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆதேஷ் 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது விக்கெட் 70 ஓட்டங்களை பெற்ற வேளையில் 13.2 ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டது. சிறப்பாக துடுப்பாடிய இரண்டு வீரர்களின் விக்கெட்கள் அடுத்தடுத்து ரன் அவுட் மூலமாக வீழ்த்தப்பட்டமை இந்துக் கல்லூரி அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரவிக் 15 ஓட்டங்களையும், சஜித்வேல் 13 ஓட்டங்களையும் பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்துக் கல்லூரி அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களை பெற்றது.

கோல்ட்ஸ் அணி சார்பாக அக்ஷு, ரமிரு, வினுஷ, ஜனிது, அமிரித் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினார்கள்.

13 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் கோல்ட்ஸ் அணியின் சிறப்பான துடுப்பாட்டம், பந்துவீச்சு அவர்களுக்கு வெற்றியினை இலகுவாக பெற்றுக் கொடுத்தது. இந்தப் போட்டியிலும் இந்துக் கல்லூரி அணி உதிரிகளாக அதிக ஓட்டங்களை வழங்கியது அவர்கள் போராட முடியாத நிலையினை ஏற்படுத்தியது.

25 ஓவர்கள் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்துக்கல்லூரி அணி 22.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ரிஷியுதன் 22 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். கோல்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நொமின் 5 விக்கெட்களை கைப்பற்றி இந்துக் கல்லூரி அணியினை தடுமாற வைத்தார். கிஷந்து 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய கோல்ட்ஸ் அணி 21.3 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து வெற்றியினை பெற்றுக் கொண்டது. இதில் மெனுல ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும், டினெத் 14 ஓட்டங்களையும், தனுக்க ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும், நொமின் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிஷியுதன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

இந்துக் கல்லூரி அணிகளது பெறுபேறுகள் தொடர்பிலும், விளையாடிய விதம் தொடர்பிலும் பயிற்றுவிப்பாளர் கார்த்திக் தனது திருப்தியினையும், சந்தோசதத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்துக் கல்லூரியில் பாடசலை கிரிக்கெட் வீரர்களை வழக்கும் முகமாக தரம் 01 முதல் கிரிக்கெட் அக்கடமி மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்றுவிப்பாளர் கார்த்திக் வீரர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகமும் தமது கழகத்தில் அக்கடமி மூலமாக பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

இந்துக் கல்லூரி - கோல்ட்ஸ் அணிகள் கிரிக்கெட் மோதல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version