இன்று முதல் பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலையை இன்று (27.03) முதல் குறைக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

மேலும், சிற்றுண்டி சாலைகளில் இன்று (27.03) முதல் பால் தேநீர் ஒன்றின் விலையை பத்து ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version