பதுளை – கண்டி ரயில் மோதி பாடசாலை மாணவன் பலி!

கண்டி – முல்கம்பொல பிரதேசத்தில் அமைத்துள்ள மேம்பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நேற்று (26.03) 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கண்டி, மடபோவல பிரதேசத்தை சேர்ந்த, கண்டியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசியை பயன்படுத்தியபடி சென்ற மாணவன், பாதசாரிகள் கடவையை விடுத்தது, ரயில் கடவையினூடாக பாதையை கடக்க முயன்றதே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மாணவனின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version