பஸ் கட்டணம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு!

எதிர்காலத்தில் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாணய மாற்று வீதத்தில் நிலைத்தன்மையை கொண்டுவர வேண்டும் என்பதுடன், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எரிபொருளுக்கான செலவு குறைவடையும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, விலைச் சூத்திரமொன்றை அமைத்து அதன் பிரகாரம், எரிபொருள் விலை குறைப்பின் பயனை பொது பயணிகளும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாகவும், மேலும் உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது இங்கும் ​​விலை அதிகரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version