சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த வருடம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க தவறியமைக்காக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்ய வேண்டுமென கோரி வழக்கறிஞர் ஒருவரினால் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது.