‘இம்முறை நல்ல விளைச்சலை காண்கிறோம்’ – அமைச்சர் ரொஷான்!

கொத்மலை, விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களின் நிர்மாணத்தின்போது தங்கள் சொந்த காணிகளை இழந்த மக்களுக்கு மகாவலி “சி” வலயத்திலுள்ள தெஹியத்தகண்டிய மற்றும் கிராதுருகோட்டே ஆகிய பகுதிகளில்குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

காலகங்கமாக விவசாயம் செய்து வரும் இந்த மக்கள் வருடாந்தம் ஆண்டும் மார்ச் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில்  தங்கள் முதல் அறுவடையை ஸ்ரீ தலதா மாளிகையில் வைத்து விசேட
வழிபாடுகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இம்முறையும் அஸ்கிரி, மல்வத்து மகா சங்கத்தினரின்  ஆசீர்வாதத்துடன் 29வது தடவையாக புதிய அரிசி திருவிழா தலதா மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க கலந்துகொண்டிருந்தார்.

இந்த ஆண்டு விவசாயிகளின் அறுவடை நல்ல விளைச்சலை கொடுத்ததாகவும், இந்நிலை தொடர்ந்தால், நாம் பொறுப்புடன் விவசாயம் செய்தால் இன்னும் அதிக விளைச்சல் கிடைக்கும் எனவும் இதனால் நாட்டில் எப்போதும்  பற்றாக்குறை இருக்காது எனவும் அமைச்சர் ரொஷான் தெரிவித்தார்.

புத்தரிசி வழிபாடு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களின் பின்னர் இம்முறை மண் உரம் வழங்குவதால், விவசாயிகளின் விளைச்சல் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'இம்முறை நல்ல விளைச்சலை காண்கிறோம்' - அமைச்சர் ரொஷான்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version