தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் அல்லது ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசியத்தை மீறும் வகையில் செயல்படும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்துக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கபட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகள் வரை பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்ய, சேமிக்க, விநியோகிக்க மற்றும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.