யாழில் அம்மன் சிலை மாயம்!

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த அம்மன் ஆலயத்துக்குள் செய்வதற்கு இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் தொடர்பிலான சர்ச்சை தொடரும் நிலையில் பலாலியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் மக்கள் மத்தியில் மேலும் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்வாறான சமபவமொன்று தொடர்பில் தமக்கு எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை என பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version