ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக முன்னணி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் பிரதமர் பதவி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களுக்குள் பேசப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த மூவரில் உள்ளடங்குகிறார்.
சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரட்டன, கபீர் ஹாஷிம் ஆகியோரும் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“நாட்டை கட்டி எழுப்புவதற்கு சரியான திட்டங்களை பின்பற்றுவதே முக்கியம் எனவும், கட்சி அரசியல் முக்கியமில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு புதிய மக்கள் ஆணை வழங்கப்படவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
“நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல திறமையானவர்கள் உள்ளனர்” என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
