Chairman வெற்றிக் கிண்ணத்துக்கான, கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வி தமிழின் ஊடக பங்களிப்போடு இந்தப்போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
16 ஆம் திகதி முதல் விளையாட்டு போட்டிகளை நடாத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன. சுகாதர வழிகாட்டல்கள் அல்லது கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டால் போட்டிகள் பிற்போடப்படும். இல்லாவிட்டால் நடைபெறும்.
இந்த தொடருக்கான கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் அணிகள் விண்ணப்ப படிவங்களை பெற்று எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக சமர்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பகல் வேளையில் கிரிக்கெட் போட்டிகளும், இரவு வேளைகளில் கால்பந்து போட்டிகளும் நடைபெறவுள்ளன.
வவுனியா மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான, கடினபந்து கிரிக்கெட் போட்டிகள் அணிக்கு 7 பேரடங்கிய 5 ஓவர்கள் போட்டியாக நடைபெறும். வர்ண உடை மற்றும் வெள்ளை பந்தில் இந்த போட்டிகள் நடைபெறும். அனுமதி கட்டணமாக 3000/- அறவிடப்படும். வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அடையாள அட்டையினை வைத்திருப்பவர்கள் மாத்திரமே இந்த போட்டிகளில் பங்குப்பற்றலாம்.
இரவு நேர கால்பந்தாட்ட போட்டிகள், அனைத்து கழகங்களுக்குமான திறந்த போட்டியாக நடைபெறவுள்ளன . வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் அடங்கிய அணிகள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் இந்த தொடரில் பங்குபற்றலாம். வீரர்கள் வவுனியாவில் வசிக்கிறார்கள் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கோரப்படும். அவற்றை பூரணப்படுத்தி விண்ணப்ப படிவத்தை வழங்கினால் மட்டுமே அணிகள் விளையாட அனுமதிக்கப்படும்.
11 பேரடங்கிய 30 – 10 – 30 என்ற நேரக்கணக்கிலான போட்டிகள் நடாத்தப்படும். அணிகளுக்கு அனுமதி கட்டணமாக 5,000/- அறவிடப்படும்.
மேலதிக விபரங்களை போட்டி ஏற்பாட்டு குழுவினரோடு தொடர்பு கொண்டு பெற்று கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு
ஜெனகன் – 0775717676
கெளசி – 0772629673
வி மீடியா – 0765747764
விண்ண படிவங்களை கீழுள்ள இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
Eye Care Optical – பழைய பஸ் நிலையம் (மக்கள் வங்கிக்கு அருகில்)
வி மீடியா நிலையம் – இல 179A, புகையிரத நிலைய வீதி – 0765747764
இந்த போட்டிகள் பற்றிய மேலதிக விபரங்கள் விதமிழ் இணையத்தினூடாக அறிவிக்கப்படும்.
