தமிழரசுக் கட்சியின் நிறுவனர் மற்றும் தமிழ்தேசியம் எம் இலக்காக வித்திட்ட தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று (31.03) வாலிபர் முன்னனியினரினால் அவரது திருவுருவ சிலையடியில் (மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில்) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சகிதமாக பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்து இருந்தார்கள்.
சிலையில் ஏறி நின்று மாலை அணிவிக்கும் ஏணியானது முன்னால் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கீ. துரைராஜசிங்கம் அவர்களினால் நேற்றைய தினம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.