பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலகம பிரதேசத்தில் நேற்று (04.04) இரவு கணவன் மற்றும் மனைவி இருவரையும் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்கள் 75 மற்றும் 69 வயதுடைய பல்லகெடுவ நாவலகம வீதியைச் சேர்ந்த இருவர் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பேரன் பணம் கேட்டதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆண் உயிரிழந்துள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய பல்லகெடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.