இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகள் இரண்டாவது பகுதி இன்று (08.04) விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், முட்டை மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைகளையும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இன்று (08.04) வழங்க உள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் தற்போது முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனத்திற்கு விதிக்கப்படும் VATயை நீக்கினால், ஒரு முட்டைக்கான விலையிலிருந்து 6 ரூபாயை குறைக்க முடியும் எனவும், உள்ளூர் முட்டைகள் விலை குறைக்கப்படும் பட்சத்தில், இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.