மோசடிமிக்க வர்த்தகங்கள் தொடர்பில் மக்கள் அவதானம்!

புத்தாண்டு காலத்தில் சட்டவிரோத வர்த்தகங்களை சுற்றிவளைக்கும் விசேட நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அளவீட்டு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், மோசடி வியாபாரிகளின் தந்திரோபாயங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவ அக்குரந்திலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருளை எடுத்துக் கொள்ளும்போது, ​​எரிபொருள் அளவீடு மீட்டர் பூஜ்ஜியத்தில் (0) உள்ளதா என்பதை கவனமாகக் அவதானித்த பின்னர் எரிபொருளை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான மோசடி வர்த்தகர்கள் தொடர்பில் 0112182250/2251/2253 எனும் விசேட தொலைபேசி இலக்கங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version