போலியான ஆவணங்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்!

போலி ஆவணங்களுடன் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரு ஈராக் பிரஜைகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய(BIA) அதிகாரிகள் அடையாளங்கண்டுள்ளனர்.

மேலும், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

தந்தை மற்றும் மகன் எனக் கூறி தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர்கள் டொமினிகன் குடியரசில் இருந்து போலியான விமான அனுமதிச் சீட்டுகளை சமர்ப்பித்தும், மேலும் போலி ஆவணங்களை காண்பித்தும் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version