சேதன பசளைக்கு உடனடியாக விவசாயத்தை மாற்றுவது சாத்தியமற்ற விடயம். அதனை முறையாக திட்டமிட்டு செயற்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
இன்று (08) ஆனமடுவ மஹாஉஸ்வெவ பிரதேசத்தில் நெற்செய்கை விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் கொவி ஹதகெஸ்ம நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இது பற்றித் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக, தான் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராடுவர் எனவும் தனக்கும் தனது பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துள்ளார் எனவும் இதன் போதும் விவசாயிகளை வாழ வைப்பதற்கான விடயங்களை வலியுறுத்தவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துளார்.
யாரும் ஒருபோதும் கடினமான முடிவுகளை எடுக்கக்கூடாது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேவைக்கேற்ப மக்களின் நலனுக்காக ஒரு படி பின்வாங்குவதில் தவறில்லை என்றும் தெரிவித்தார். . இருப்பினும் தன்னிச்சையாக எடுக்கின்ற முடிவுகளின் விளைவு கவலைக்குரியது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.