கேகாலையில் பெண்ணொருவர் கொலை

கேகாலையில் ஒரு பிள்ளையின் தாய் அவரது கணவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்று மிலாங்கொட, லம்புதுவ பகுதியை சேர்ந்த 23 வயதான குமுதினி டேஷானி ரணசிங்க என்ற பெண் இரத்த வெள்ளமாக வீட்டின் சமையலறை பகுதியில் இறந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

மழுங்கிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டே அவர் இறந்துள்ளார் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அரநாயக்க பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிகை வழங்கியதன் பின்னர் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெறுமெனவும், வைத்தியசாலையில் உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்ததனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலையில் பெண்ணொருவர் கொலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version