லக்னோ அணிக்கு முதலிடம்

ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் மற்றும் லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற விறு விருப்பன போட்டியில் லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணி 01 01 விக்கெட்டினால் வெற்றி பெற்றது. லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணி நான்கு போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்று 06 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. பெங்களுர் அணி மூன்று போட்டிகளில் 01 வெற்றியினை பெற்றுள்ளது.

ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் மற்றும் லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. பெங்களுர் அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணி நான்கு போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பெங்களுர் அணி மிகச் சிறந்த ஆரம்பத்தை பெற்ற அதேவேளை முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் அதிரடி நிகழ்த்தினர். விராத் கோலி 61(44) ஓட்டங்களையும், பப் டு பிளேஸிஸ் 79(46) ஓட்டங்களையும், கிளன் மக்ஸ்வெல் 59(29) ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 96 ஓட்டங்கள். இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் 116 ஓட்டங்கள். மார்க் வூட், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். பப் டு பிளேஸிஸ் 115 மீட்டர் தூரம் கொண்ட ஆறு ஒட்டமொன்றை இன்றைய போட்டியில் அடித்திருந்தார்.

பதிலுக்கு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த லக்னோ அணியின் முதல் மூன்று விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட தடுமாறிப்போனது. லோகேஷ் ராகுல் நிதானம் காக்க, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி நிகழ்த்தி லக்னோ அணியினை மீட்டெடுத்தார். ஆனாலும் அவர் 65(30) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பெங்களுர் அணி மீண்டும் பலமடைந்தது. அவரை தொடர்ந்து ராகுலும் ஆட்டமிழக்க களமிறங்கிய நிக்லொஸ் பூரான் 15 பந்துகளில் அரைச் சதமடித்து இந்த வருட வேகமான சதத்தை பெற்றுக் கொடுத்தார். அதன் மூலம் வாய்ப்பை மீண்டும் தனது அணிக்காக மாற்றினார். அயுஷ் படோனி நல்ல இணைப்பாட்டத்தை பூரானுக்கு வழங்கி 84 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். பூரான் 62(19) ஓட்டங்களையும், படோனி 30(24)ஓட்டங்களையும் பெற்றனர். மொஹமட் ஷிராஜ் தனது இறுதிப் பந்தில் பூரானின் விக்கெட்டினை கைப்பற்ற போட்டியின் நிலை விறு விறுப்பாக மாறியது. சமநிலைக்கான ஆறு ஓட்டம் ஒன்றை படோனி பெற்ற போதும் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஓட்டங்களாக ஓடி லக்னோ அணி சமநிலை பெற்ற பொது விக்கெட் வீழ்த்தப்பட்டது. இறுதிப் பந்தில் ஒருவாறாக லக்னோ அணி வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷிராஜ் 03 வெய்ன் பார்னல் 03 விக்கெட்களையும் கர்ண் ஷர்மா, ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

லக்னோ அணிக்கு முதலிடம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version