ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தானே என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், டயானா கமகே தெரிவித்துள்ளார். தன்னை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து. எனது கட்சியிலுருந்து என்னை எவ்வாறு நீக்க முடியுமெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ள அவர் இந்த செயற்பாடு சட்டவிரோதமானது என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும், மற்றையவர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் போது எனது கட்சியினை கொடுத்து உதவினேன். இது என்னுடைய கட்சி. தொலைபேசி சின்னம் என்னுடைய சினம் என பாராளுமன்ற உறுப்பினர், டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என சொல்லிக்கொள்பவர்கள் கோமாளிகள் என டயானா கமேகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். என் வீட்டை கள்ள சாவி போட்டு கைப்பற்றியது போன்ற சம்பவமே தற்சமயம் நடைபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாக குழு இந்த முடினை எடுத்தாக தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் கேட்டபோது நான் வெளியேற்றப்பட்டது அவர்களுக்கு தெரியாது என கூறினார்கள்.
கட்சி சிதைவடைந்து செல்கிறது. பல உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்படுகிறார்கள். இது போன்ற சமப்வங்கள் தொடருமானால் கட்சிக்குள் உள்ள பிரிவினைகள் தொடர்பில் வெளியிடுவேன் எனவும் டயானா கமகே மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக டயானா கமகே வாக்களித்த போது, கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்டதற்காக அவரை இடை நிறுத்துவதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே தற்போது அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
