ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஐக்க்கிய மக்கள் சக்தியும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த போதும் அந்த நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
“ராஜித சேனாரட்ன அரசாங்கத்தில் இணையும் திட்டத்தை மாற்றியுள்ளார். அனைவரும் அவரை பிழையாக நினைத்துள்ளார்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, அடங்கிய குழுவினருடன் ராஜித சேனாரட்ன சந்தித்து தனது நிலைப்பாடுகளை விளக்கி தெளிவுபடுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து குழப்ப நிலைகள் தீர்ந்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துளளார்.
“ஊடகவியலார் சந்திப்பில் தான் பேசிய விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தி குழுவினருக்கு விளங்கப்படுத்தியதாகவும், அவர்கள் அடங்கலாக ஊடங்கள் உட்பட அனைவரும் தன்னை பிழையாக கணித்துள்ளதாகவும் ஊடகமொன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.
இந்த குழப்ப நிலை தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கோரியதாகவும், ஆனால் தான் சர்ச்சைகளை ஏற்படுத்திய ஊடக சந்திப்பு தொடர்பான முழுமையான வீடியோவை வெளியிடுவதாகவும்” கூறியதாக ராஜித சேனாரட்னா தெரிவித்துள்ளார்.
