நாளைய தினம் (14.04) வெப்பச் சுட்டெண் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண வெப்பநிலையை விட மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வெளியில் இருப்பது அல்லது, அதிக நேரம் வேலை செய்வது உடற்சோர்வை ஏற்படுத்தும் எனவும், நீரிழப்பு காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் பகல் வேளைகளில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.