சிங்கள, தமிழ் புதுவருடத்துக்கு பின்னரான பாராளுமன்ற கூட்ட தொடர் இம்மாதம் 25 ஆம் திகதி கூடவுள்ளது. அதற்க்கு முன்னரான கட்சி தலைவர்கள் கூட்டம் இம்மாதம் 20 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தலைமையில் கூடவுள்ளது.
பாராளுமன்ற கூட்ட தொடரை ஆரம்பிப்பது மற்றும், பயங்கவராத தடை சட்டத்தை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பிலும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் கடும் எதிர்ப்புகள் நிலவும் நிலையில் கடந்த 04 ஆம் திகதி பாரளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த பயங்கரவாத தடை சட்ட பிரேரணை பிற்போடப்பட்டது.
