சஜித் பிரேமதாவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தகவல் அனுப்பியதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் ஒரே குடைக்குள் கொண்டுவர தானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முயற்சித்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறியுள்ள மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு பதிலளிக்காத காரணத்தினால் அந்த திட்டத்தை கைவிட்டதாக மேலும் கூறியுள்ளார்.
