குண்டுவெடிப்பில் தப்பினர் ஜப்பான் பிரதமர்

ஜப்பானில் திறந்த வெளி நிகழ்வொன்றில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா இன்று(15.04) உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவரை நோக்கி புகையுடன் கூடிய குண்டொன்று வீசப்பட்டுள்ளது. பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்த போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து பிரதமர் உடனடியாக பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடாத்தியவரை பொலிஸார் இனம்கண்டு உடனடியாக கைது செய்துள்ளனர். முந்தைய பாரிய வெடிப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதானல் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் உரையாற்றியதாக நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்த ஜப்பான் ஊடகம் தெரிவித்துள்ளது. முக்கியமான தேர்தலுக்கான நடுப்பகுதியில் தாம் இருப்பதாகவும், எவ்வாறாயினும் அனைவரும் இணைந்து தேர்தலை நடாத்தி முடிக்கவேண்டுமெனவும் அவரது உரையில் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பதவி வகித்த ஷின்ஸோ அபே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜாப்பானில் வன்முறைகள் நடைபெறுவது குறைவாக இருக்கின்ற போதும், இவ்வாறான சந்தர்ப்பங்கள் மூலமாக அங்கு பாதுகாப்பு தொடர்பிலான கரிசனை உருவாகியுள்ளது. இந்த சம்பவம் அவரின் கொலையின் எதிரொலியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வகாயமா மாகாணத்தின், சைகாஷி மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதான சந்தேக நபர் மடக்கி பிடித்து தூக்கி செல்லும் காட்சி வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதோடு G 07 மாநாடு ஹிரோஷிமாவில் நடைபெறவுள்ளது. இவ்வாறன நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பிரதம செயலாளர் ஹீரோஹஸு மட்சுனோ தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பில் தப்பினர் ஜப்பான் பிரதமர்

Social Share

Leave a Reply