முஷரப் இற்கு அம்பேத்கர் விழாவில் மாபெரும் வரவேற்பு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான முஷரப் ‘அம்பேத்கர் ஜயந்தி’ விழாவில் குதிரை வண்டியில் பவனியாக அழைத்து செல்லப்பட்டதுடன் விழாவிலும் மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இடம்பெற்ற ‘அம்பேத்கர் ஜயந்தி’ விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் SMM முஷாரபுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதுடான் நிகழ்வில் உரையாற்றியமையும் வரவேற்பை பெற்றது.

இளம் போராளி டாக்டர் ஆ. சா செல்வராஜாவின் தலைமையில் மானம்பதி மண்ணின் மைந்தர்கள்
கழக உடன்பிறப்புக்கள் நடாத்தும் டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாள் விழா நேற்று(15.04) இந்தியாவில் இடம்பெற்றது.

இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மீன் வளம் கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் L. முருகன்,
இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் SMM முஷாரப், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

முஷரப் இற்கு அம்பேத்கர் விழாவில் மாபெரும் வரவேற்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version