இன்றைய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

இன்றைய தினம் (18.04) கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மக்கள் வெப்பம் அல்லது வெயிலில் தொடர்ந்து செயல்படுவது அதிக தாக்கத்தை ஏற்டபடுத்தும் என்பதால் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளி பணியிடங்களில் பணிபுரிவோர் இயலுமானவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகளை மற்றும் குழந்தைகள் தொடர்பில் அதிக கவனம் எடுக்கவும், அதிகமாக தண்ணீர் அருந்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் அதிக வெப்பமான காலநிலை நிலவும் பிரதேசங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version