உருத்திரிபடைந்த புதிய துணை வகை கொரோனா வைரஸான, XBB. 1.16 அல்லது Arcturus எனப்படும் திரிபு தற்போது நாடு முழுவதும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், இது ‘கண்காணிப்பில் உள்ள ஓர் இனம்’ என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவின் சில பகுதிகளில் கொவிட் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும், Arcturus துணை வகை கொரோனா 29 நாடுகளில் பரவியிருப்பது ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2021 இன் பிற்பகுதியில் கண்டறியப்பட்ட உறுதிரிபடைந்த கொரோன வகை எனவும், இது ஓமிக்ரான் வகையின் துணை வகை என்று அழைக்கப்படுவதுடன், டெல்டா வகையிலிருந்து மாற்றப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதி வரையான காலப்பகுதிக்குள் உலகளவில் 0.21% நோயாளிகள் இந்த திரிபு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 3.96% ஆக அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் திகதியின் நிலவரப்படி, இறப்பு எண்ணிக்கை 7.2% ஆக அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த திரிபு தொடர்பில், தீவிரமான நிலை எனும் எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த, பிரிட்டனில் உள்ள கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹண்டர், இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்று உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றாக மாறும் என தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த காலங்களில் கோவிட் ஏற்படுத்திய பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.