புத்தாண்டு காலத்துக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (18.04) முதல் புதுப்பிக்கப்படும் அடுத்த வாரத்திலும் வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களில் நுகர்வு உள்ளிட்ட தரவுகள் ஆராயப்பட்டு, அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடருமா இல்லையா என்பது எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட்டுள்ளதாகவும் இதனால் பல பகுதிகளில் உள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.