புதுவித விசா மோசடி கண்டுபிடிப்பு!

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய முறையை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியா ஊடாக மோல்டாவிற்கு செல்ல முற்பட்ட தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன, அங்கிருந்து இலங்கையர்களுக்கான விசா நடைமுறைகள் உட்பட விவகாரங்களை தூதரக அதிகாரிகள் கையாளுகின்றனர்.

இதன்மூலம், தரகர்களின் உதவியுடன் தவறான ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விசா பெறுவதற்காக இந்தியாவுக்குச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி மோல்டாவிற்கு வீசா பெற்று இந்தியா ஊடாக மோல்டாவிற்கு செல்ல திட்டமிட்ட இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த புதிய விசா மோசடி திட்டம் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version