அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மேலும் நீடிப்பு

எரிபொருளுக்கான கோட்டா புது வருடத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டது. அந்த அதிகரிப்பு மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் D.V சாணக்க தெரிவித்துள்ளார்.

சகல விடயங்களையும் உடனுக்குடன் ட்விட்டர் மூலமாக அறிவிக்கும் வலுசக்தி அமைச்சர் இந்த விடயத்தில் மௌனம் காக்கின்றார்.

கணக்கெடுப்புகள் மற்றும் எரிபொருள் பாவனை அடங்கலான தரவுகளை வைத்து எதிர்காலத்தில் இதே அளவை தொடர்வதா இல்லையா என முடிவெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். இது தொடர்பிலான கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மேலும் நீடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version