சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் வெளியாகிவரும் செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள சீன தூதரகம் தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து 1 இலட்சம் குரங்குகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு ஆய்வுக்காக இலங்கை அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. விவாசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சீன நிறுவனம் ஒன்று ஆய்வுக்காக இந்த குரங்குகளை கோரியதாகவும், அதனை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் கூறியதாக ஊடங்கள் மூலம் செய்திகள் வெளியாகியிருந்தன.
சீன நிறுவனம் எதுவும் அவ்வாறான கோரிக்கைகளை முன் வைக்கவில்லை எனவும், விலங்குகளது ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றை கையாளும் சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இது தொடர்பிலான எந்தவித விடயங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் மேலும் சீன தூதரகம் உறுதி செய்துள்ளது.
அழிந்து வரும் வன விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றை பாதுகாப்பதற்கான 1998 ஆம் சட்டத்தினை உறுதியாக சீனா பின்பற்றுவதாகவும், சர்வதேச ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும், அவற்றை உலகில் பாதுக்காக்கும் முக்கிய நாடுகளில் சீனா முன்னணியில் உள்ளதாகவும் சீன தூதரகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
