பாணந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேச பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள 14 பள்ளிவாசல்கள், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள 3 பள்ளிவாசல்கள், மற்றும் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள 6 பள்ளிவாசல்களில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நடமாடும் சேவை வாகனங்கள் மூலம் விசேட பாதுகாப்பு பணி முன்னெடுக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.