வியட்நாமிலிருந்து 23 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

வியாட்நாமுக்கு படகில் சென்ற 303 பேரில் 23 பேர் இலங்கைக்கு நாடு திருப்பப்பட்டுள்ளனர். 303 பேரில் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி 151 பேர் திருப்பி அனுப்பப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ளவர்களில் 23 பேர் கடந்த 19 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

நவம்பர் 07 ஆம் திகதி வியட்நாம் படகு ஒன்றில் 303 பயணிகள் சட்டவிரோதமாக வெளிநாடு சென்று குடியேறுவதற்காக பயணித்த நிலையில் இலங்கை கடற்படையினரால் இனம் காணப்பட்ட நிலையில் வியட்நாம் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குறித்த படகினை கைப்பற்றியதோடு, அவர்களை அங்கே தற்காலிகமாக தங்க வைத்திருந்தனர். அவர்களே கட்டம் கட்டமாக இலங்கைக்கு மீள அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

நாடு திரும்பியவர்களில் 19 வயது தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்ட 06 பெண்களும், 18 வயதுக்கு உட்பட்ட இருவர் உள்ளடங்குகிறார்கள். இவர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை உரிய தரப்புகள் எடுத்து வருகின்றன.

வியட்நாமிலிருந்து 23 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Social Share

Leave a Reply