ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் (21.04) நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று காலை 8.45 மணிக்கு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விசேட நினைவேந்தல் நிகழ்வும், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்நிகழ்வில், நேற்று பிற்பகல் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இருந்து நடைபவனியாக, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நோக்கி வந்த மக்களும் பங்குகொண்டுள்ளதுடன், சர்வமத தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், தாக்குதலில் உயிரழந்தவர்களில் உறவுகள், நீதி கோரும் கத்தோலிக்க மக்கள் என அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
2019 ம் ஆண்டு ஏப்ரல் ௨௧ உயிர்த்த ஞாயிறு தினத்தன்று
இலங்கையில் உள்ள மூன்று கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும், கொழும்பில் உள்ள மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்தும் தொடர்ச்சியான பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியானதுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதியை பெற்றுத்தருமாறு கோரி நாடுமுழுவதிலுமுள்ள தேவாலயங்களில் விடேச வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.