வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இன்று சாதாரண வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவிலேயே இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவிப்பின்படி, வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நேரத்தில், வெளியில் செல்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதிகமாக நீர் அருந்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும், சிறு குழந்தைகள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Social Share

Leave a Reply