யாழில் பயங்கரம் – ஐவர் படுகொலை

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரு வீட்டில் ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவர் பாடுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும், அவர்களது உறவினர்களுமே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் ஆண்களும், இருவர் பெண்களுமென இனம் காணப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்மித்த 12 ஆம் வட்டாரத்தில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது. கொலை செய்தவர்கள் தொடர்பிலோ, கொலைக்கான காரணம் தொடர்பிலோ இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பயங்கரம் - ஐவர் படுகொலை

Social Share

Leave a Reply