சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல்!

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த விசேட வழிகாட்டுதல்கள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுடன், நீரிழப்பு மற்றும் வியர்வை காரணமாக அதிக சோர்வு மற்றும் தீவிரமான நோய் நிலைமைகள் ஏற்பட கூடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாடசாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதிக வெப்பம் உள்ள நாட்களில் வெளிப்புற அல்லது விளையாட்டு மைதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் அதிக சூரிய ஒளியில் வெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டாயமாக தண்ணீர் அருந்துவதையும், களைப்பைப் போக்க ஓய்வு எடுத்துக் கொள்வதும் சிறந்தது என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக வெப்பமான நாட்களில் பாடசாலைகளுக்கு இடையிலான இல்ல விளையாட்டு மற்றும் பயிற்சிகளை நிறுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version