சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்று ஐ.பி.எல் தொடரில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
நேற்று கொல்கொத்தா ஈடின் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 73 ஓட்டங்கள். டெவன் கொன்வே 56(40) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அஜிங்கையா ரெஹானே 29 பந்துகளில் 71 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார். ஷிவம் டூபே 21 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ருதுராஜ் ஹெய்க்வூட் 35(20) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் குல்வான்ட் கேஜ்ரொலியா 02 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தமையினால் கடினமான இந்த இலக்கை அடைய முடியவில்லை.
கொல்கொத்தா அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஜேசன் ரோய் 61(26) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ரிங்கு சிங் 53(33) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண மற்றும் ருஷார் தேசபந்தே ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
சென்னை அணி விளையாடியுள்ள 07 போட்டிகளில் 05 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கொல்கொத்தா அணி 07 போட்டிகளிகள் 02 வெற்றிகளைப் பெற்று 04 புள்ளிகளோடு 08 ஆம் இடத்தில் காணப்படுகிறது.
