ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (24.04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் கூட்டமும் இன்று (24.04) இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் தலைமையில் இன்று (24.04) இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், கட்சியின் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களும் இதில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை பெற்று ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்களை மீள அழைத்து வருவதற்காக இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் முன்னைய கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.