ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதியிட அணியான டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கும், ஒன்பதாமிட அணியான சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்குமிடையிலான போட்டியில் டெல்லி அணி 07 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 04 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்தும் அவர்கள் பத்தாவது இடத்திலேயே காணப்படுகின்றனர். ஹைதராபாத் அணி 04 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாமிடத்தில் தொடர்கிறது. இரு அணிகளும் 07 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாவது கடினமான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று(24.04) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மானிஷ் பாண்டி 34(27) ஓட்டங்களையும், அக்ஷர் பட்டேல் 34(43) 0ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வொசிங்டன் சுந்தர் 03 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார் 02 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக் கொணடது. இதில் மயங் அகர்வால் 49(39) ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாஸன் 31(19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அன்றிச் நோக்யா, அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
