இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராதெனிய பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதியுயர் உணர்திறன் பிரதேசங்களில் நில அதிர்வு அளவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடல்பகுதியில் நேற்று (24.04) அதிகாலை 12.45 மணியளவில் ஏற்பட்டதுடன், இதன் தாக்கம் பதுளை, கண்டி மற்றும் மாவனல்ல பிரதேசங்களில் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நாட்டில் அவ்வப்போது பல நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.
மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிடிய, திருகோணமலை மற்றும் கிரிந்த உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டது.
எனவே இது குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பேராசிரியர் அத்துல வலியுறுத்தியுள்ளார்.