ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருத வேண்டாம் என ஐ.நா கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் ஓரினச்சேர்க்கை மற்றும் LGBT (Lesbian, gay, bisexual, and transgender) நபர்களை குற்றமாக கருதும் சட்டங்களை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கை தனது செயற்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வதற்கு பொறுப்பான ஐ.நா குழந்தை உரிமைகள் குழு, ஒரே பாலின உறவுகளை குற்றமாக்கும் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பான அறிக்கையில், LGBTக்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும், LGBTக்களுக்கு எதிரான துன்புறுத்தலைத் தடுக்கவும், LGBTக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்தவும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், குற்றவியல் சட்டத்தின் தற்போதுள்ள பிரிவுகள் 365 மற்றும் 365A இன் கீழ், குழந்தைகள் “குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்” என்பதையும் குழு எடுத்துக்காட்டியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் “சட்டம் காலனித்துவ காலத்திலிருந்து மரபுரிமையாகப் பெறப்பட்டது என்றும், தற்போதைய அரச நடைமுறையின் கீழ், குழந்தைகள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை” என்றும் இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும் இது குறித்த சட்டங்களை சீர்திருத்த முயலுமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு , இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version