ரணிலே பொது வேட்பாளர் – பிரசன்ன ரணதுங்க

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தனது பொது வேட்பாளருக்கான தெரிவு என அரசாங்கத்தின் பிரதம கொரோடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“நாட்டின் நிலையை ரணில் விக்ரமசிங்கவே நிலைநாட்டியுள்ளார். அதன் காரணமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கே தன் ஆதரவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க நேற்று(24.04) மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விஜயம் செய்த வேளையில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வீட்டை போராட்ட காலத்தில் எரித்த தலைக்கவசம் அணிந்தவர்கள் பாரளுமன்றத்துக்கு அருகில் அனுரகுமார திஸநாயக்கவுக்கு எதிராக போராட்டம் நடாத்தியவாக்ரள். அவர்களுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது சம்மந்தமான அழைப்புக்காகவே மனித உரிமை அணைக்குழு வருகை தந்தாக அமைச்சர் கூறினார். அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப்போகிறார் என பேச்சுக்கள் அடிபடுகின்ற போதும் அவருக்கு அவ்வாறான எண்ணம் எதுவுமில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு சட்டபூர்வமாக்கப்படுகிறது என பயங்கரவாததடை சட்டம் தொடர்பிலும் அவர் கருத்து கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version