2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று இலங்கையில் நான்கு கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து இலங்கையில் மொத்தம் 672,143 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இதுவரையில் 655,000 க்கும் அதிகமானோர் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஆரம்ப காலகட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை நாளாந்தம் வெளியிட்ட போதிலும் அதனை சிறிது காலம் இடைநிறுத்தியிருந்து. தற்போது மீண்டும் புதிய கொரோனா தொற்றாளர்களின் விபரங்களை நாளாந்தம் வெளியிட தீர்மானித்துள்ளது.