இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (26.04) இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
மன்னார், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் 75 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவதானம் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.