இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அபாரம்

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி 1 விக்கெட்டினை இழந்து 357 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதில் நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 149(234) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரின் முதற் சதமாகும். திமுத் கருணாரட்ன 115(133) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 83(96) ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கம்பர் 1 விக்கெட்டினை கைப்பற்றினார். குசல் மென்டிஸ் அதிரடியாக துடுப்பாடி வருகிறார். 5 சிக்சர்களை அடித்துள்ளார். ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் அடித்தார். நிஷான் மதுஷ்க மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் 129 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். இலங்கை அணி 135 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. இன்று மழை காரணமாக போட்டி பிற்பகல் 3:45 இற்கு நிறுத்தப்பட்டது.

அயர்லாந்து அணி தமது முதல் இன்னிங்சில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் கேர்ட்டிஸ் கம்பர் தனி கன்னிச்சதத்தை பெற்றுக் கொண்டார். அவர் 111 ஓட்டங்களை பெற்றார். போல் ஸ்டெர்லிங் 103 ஓட்டங்களை பெற்றார். இது அவருக்கு முதல் சதமாகும். அன்டி பல்பேர்னி தனது முதல் சதத்தை பெறும் வாய்ப்பை இழந்து 95 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். லோர்கான் ரக்ரர் 80 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார், விஸ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அபாரம்

Social Share

Leave a Reply