அண்மையில் யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவுகளை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் படு காயமடைந்திருந்த 100 வயதான மூதாட்டி, யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(27.04) இறந்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்திருந்த இரட்டை பிராஜாவுரிமை கொண்டுள்ள 52 வயதான நபரே இந்த கொலைகளின் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார். தான் மீண்டும் ஜேர்மனி திரும்பி செல்வதற்கான பண தேவைகளுக்காக நகைகளை கொள்ளையடித்ததாக விசாரணைகளின் போது பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கொலைகளை செய்துவிட்டு சந்தேக நபர் திருடிச் சென்ற 3 சங்கிலிகள், 8 மோதிரங்கள், ஒரு சோடி தோடு, ஒரு பெண்டண்ட், 2 தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.