சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அந்த உடன்படிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது…
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அரசாங்கம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிவாரணப் பொதி கிடைப்பது இது முதல் தடவையல்ல. இந்த வடிவத்தில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நாணய நிதியத் திட்டம் (16வது நிவாரணப் பொதி) 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன்,
தற்போதைய அரசாங்கத்தால் திடீரென நிறுத்தப்பட்டது.
இலங்கையுடனான விரிவான கடன் வசதி தொடர்பான சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையானது, நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்து, பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்து மற்றும் ஊழலைத் தடுப்பதற்குத் தேவையான
கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்து இலங்கையின் வளர்ச்சித் திறனைத் திறந்து பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வாக்குறுதிகளை நடைமுறை மட்டத்தில் நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது வரை மேற்கொண்ட நடவடிக்கைகளைக்
கவனத்தில் கொள்ளும் போது எதிர்காலத்தில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை எதிர்காலத்தில் நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பின்வரும் காரணங்களால், இந்த உடன்படிக்கைக்கு பாராளுமன்ற அங்கீகாரம் வழங்கும் பணியை ஆதரிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. – வெளிப்படைத்தன்மை இல்லாமை சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னர், குறித்த நிதியத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தை பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்க அரசாங்கம் 200 நாட்களை எடுத்துக் கொண்டது.. இந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் பாராளுமன்றத்தினூடாகவோ அல்லது அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஊடாகவோ உரிய உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடவில்லை.
-02-
– அரசாங்க நிதித் துறையை வலுப்படுத்துதல்
அரச நிதித் துறையை வலுப்படுத்தும் பணியில், வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்கு ஏற்ப முக்கிய செலவுக் குறைப்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
– உழைக்கும் வர்க்க மக்கள் மீது நியாயமற்ற வரிச்சுமை
வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே வரி வலையில் சிக்கியுள்ள உழைக்கும் மக்கள் மீதான வரிகளை மேலும் அதிகரிக்க எளிதான வழியை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளது. வரி எல்லைகள்
குறைக்கப்பட்டு, வரி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. மக்கள் ஏற்கனவே உயர் பணவீக்கம், அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருக்கம் உயர் வருமானக்
குழுக்களின் பலத்தைப் பயன்படுத்தி வரி வலையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி வசூல் முறைகளுக்கு உத்தரவாதம் அளித்து அர்ப்பணிப்புடன் செயற்படல் காணப்படவில்லை.
சொத்து மற்றும் வள பரம்பரைக்கு உரிய வரிகள் மூலம் பணக்காரர்கள் மீது வரிகளை விதிக்கும் பணி 2025 இல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
– சமூக பாதுகாப்பு வலையமைப்புகள்
இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக சமூகத்தின் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு நிதியுதவி மூலம் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படல் வேண்டும்.. துஷ்பிரயோகம் செய்ய முடியாத முறையின் அறிவியல் ரீதியாக நிவாரணம் பெறத் தகுதியான மக்களை சரியான முறையில் கண்டறிந்து நிவாரணம் வழங்கு வேண்டியிருந்தாலும் நிவாரணத்தை வழங்குவதற்காக மக்களைத் தெரிவு செய்யும் போது அரசியல்மயப்படுத்தப்பட்ட செயல்முறையை தொடர்ந்தும் பயன்படுத்த அரசாங்கம்
முன்மொழிகிறது.
– நிதிச் சேவைத் துறையின் ஸ்திரத்தன்மை
இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் நிதிச் சேவைத் துறையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முறைமை காணப்படாமை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது பணப்புழக்கம் மற்றும் மூலதனப் போதுமான அளவு
ஆகிய இரண்டிலும் உள்நாட்டு வங்கி அமைப்பை சீர்குலைத்து உள்நாட்டு வங்கித் துறைக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது ஊழியர் ஓய்வூதிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்
பொறுப்பு நிதியம் போன்ற நிதியங்களின் மதிப்பையும் கடுமையாகக் குறைக்கும்.
-03-
ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்றுநோய் மற்றும் 2022 ஆம் ஆண்டின் சினக்கலான தன்மை ஆகியவற்றால் சவாலான நான்கு வருட காலப்பகுதியின் காரணமாக ஏற்கனவே அதிக அளவு செலுத்தாத கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் நிதிச் சேவைகள்
துறையை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்.
– பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போதாமை.
ஊழலைத் தடுப்பது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு முன்முயற்சி எடுப்பதாக சனாதிபதியோ அல்லது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எந்தவொரு உறுப்பினரோ உறுதியளிக்கவில்லை.
– உடன்படிக்கையில் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள பலவீனங்களைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது வீண் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்தாகும். பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றும் முழுப் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் பொதுவாக நாட்டு மக்களையும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சமூகங்களையும் பாதுகாக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்படவில்லை என்பதால், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியாகிய நாம் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது அர்த்தமற்ற செயல் எனக் கருதுகின்றோம்.