வவுனியா ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயத்தில் இடம்பெறும் உற்சவ பூஜைக்கு நேற்று (28.04) இரவு ஆலயத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த போது ஆலயத்தின் கதவினுள் இருந்த வயரில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைபட்டமையால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளாதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் நா.கபிலன் (வயது 29) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version